/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இரு தலைமையாசிரியருக்குநல்லாசிரியர் விருது வழங்கல்இரு தலைமையாசிரியருக்குநல்லாசிரியர் விருது வழங்கல்
இரு தலைமையாசிரியருக்குநல்லாசிரியர் விருது வழங்கல்
இரு தலைமையாசிரியருக்குநல்லாசிரியர் விருது வழங்கல்
இரு தலைமையாசிரியருக்குநல்லாசிரியர் விருது வழங்கல்
ADDED : செப் 12, 2011 02:20 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்
மற்றும் கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
இருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.தர்மபுரி நகராட்சி மகளிர்
உயர்நிலைப்பள்ளி தலமையாசிரியராக பணிபுரியும் கஸ்தூரிக்கு இந்தாண்டுக்கான
நல்லாசிரியர் விருது சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் சண்முகம்
வழங்கினார். தலைமையாசிரியர் கஸ்தூரி கடந்த இரு ஆண்டாக நகராட்சி பள்ளி
மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 100 சதவீத தேர்ச்சி அடைய செய்தார்.
கடந்தாண்டு லயன்ஸ் சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருது
பெற்றார்.கல்வித்துறை மூலம் இந்தாண்டு 100 சதவீதம் தேர்ச்சிக்கு மாவட்ட
நிர்வாகத்தின் மூலம் விருது வழங்கப்பட்டது. இந்தாண்டு காமராஜர் பிறந்த நாள்
விழாவில், கஸ்தூரிபா சேவா சங்கம் சார்பில் முதல்வன் விருதும்
வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை
நேரங்களில் சிறப்பு பயிற்சிகள் அளித்து மாணவர்களின் தேர்ச்சிக்கு சிறப்பு
கவனம் செலுத்தும் தலைமையாசிரியை கஸ்தூரிக்கு நல்லாசிரியர் விருது
தேர்வுக்கு காரணமாக அமைந்தது.* கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர் பழனிமுருகனுக்கும் சென்னையில் நடந்த விழாவில், அமைச்சர்
சண்முகம் நல்லாசிரியர் விருது வழங்கினார். தலைமையாசிரியர் பழனி முருகன்
கடந்த 2009ம் ஆண்டு வரையில் தர்மபுரி அதியமான் கோட்டை அரசு
மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். பதவி
உயர்வு பெற்று கடந்த 2010ம் ஆண்டு கடத்தூர் அரசு மகளிர் பள்ளியில்
தலைமையாசிரியராக பணிபுரிகிறார்.கடந்த 1990 முதல் 2005ம் ஆண்டு வரை
அதியமான்கோட்டை பள்ளி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் முதல் மற்றும்
இரண்டாமிடத்தில் தேர்ச்சி பெற்றது. பள்ளியில் மாதம் இரு முறை இலக்கிய
மன்றங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார். 'அதியமான்கோட்டை ஒர்
ஆய்வு' என்ற நூலை எழுதியுள்ளார்.பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவுப்படி ப்ளஸ் 2
மற்றும் பொது தேர்வு வினாத்தாள் எடுக்கவும், விடை குறிப்புகள் எடுக்கவும்
தேர்வு செய்யப்பட்டு பணி செய்துள்ளார்.