ADDED : செப் 11, 2011 11:21 PM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கிராம ஊராட்சிகளில் செயல்படாத சுகாதார வளாகங்களை பராமரிக்க திட்ட மதிப்பீடுதயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு செய்த, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பொன்னையா பிச்சம்பட்டி, ஒக்கரைப்பட்டி கிராமங்களுக்கு சென்றார். ஊராட்சிகளில் உள்ள சுகாதார வளாகங்களில், பவுண்டரி, செடி, கொடிகள் வைத்து பராமரிக்க வேண்டும்,என அறிவுறுத்தினார். எரதிமக்காள்பட்டி அரச மரகுளம் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார். திட்ட இயக்குனர் தர்மசிவம், உதவி செயற்பொறியாளர் பசுபதி,பி.டி.ஓ., முகமது இப்ராஹிம், கலைசெல்வராஜன் உட்பட பலர் உடன் சென்றனர்.