/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை போலீஸ் கமிஷனருக்கு நுகர்வோர் கோர்ட் சம்மன்சென்னை போலீஸ் கமிஷனருக்கு நுகர்வோர் கோர்ட் சம்மன்
சென்னை போலீஸ் கமிஷனருக்கு நுகர்வோர் கோர்ட் சம்மன்
சென்னை போலீஸ் கமிஷனருக்கு நுகர்வோர் கோர்ட் சம்மன்
சென்னை போலீஸ் கமிஷனருக்கு நுகர்வோர் கோர்ட் சம்மன்
ADDED : செப் 09, 2011 02:00 AM
சென்னை : 'பிடிவாரன்ட்' உத்தரவை செயல்படுத்தாதது குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, சென்னை போலீஸ் கமிஷனருக்கு சம்மன் அனுப்ப, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன். இவர், கோடம்பாக்கம், ஆண்டவர் நகரில் இயங்கி வரும், 'அமிர்தம் ஆட்டோ கன்சல்டிங்' மற்றும் தி.நகரில் செயல்படும், 'வி.கே.பைனான்ஸ்' ஆகிய நிதி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, 2003ம் ஆண்டு, சென்னை (தெற்கு) நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில், 2005 பிப்ரவரியில், வெங்கடேசனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
அத்தீர்ப்பை எதிர்மனுதாரர்கள் செயல்படுத்தாததால், 2005 ஏப்ரலில் மனுதாரர், நிறைவேற்று மனு (இ.பி.,) தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணைக்கும், குறிப்பிட்ட தேதியில் எதிர்மனுதாரர்கள் ஆஜராகவில்லை.
அதையடுத்து, 2005 ஆகஸ்டில், எதிர்மனுதாரர்களை கைது செய்ய, கோடம்பாக்கம் மற்றும் தி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, நுகர்வோர் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக, கடந்த மார்ச் வரை, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு ஒன்பது முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும், எதிர்மனுதாரர்கள் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து, கடந்த மாதம் 26ம் தேதி, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, 'சம்மன்' அனுப்பப்பட்டது. அவ்விசாரணைக்கும், தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர்கள் கோர்ட்டிற்கு வரவில்லை.இந்நிலையில், ''பிடிவாரன்ட்' உத்தரவு செயல்படுத்தப்படாதது குறித்து, அடுத்த மாதம் 4ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, சென்னை (தெற்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோர்ட் உத்தரவை போலீசாரே மதிக்காதது, மனுதாரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.