/உள்ளூர் செய்திகள்/மதுரை/"சட்டம் தெரியாது என்பதை ஏற்க முடியாது': நீதிபதி பேச்சு"சட்டம் தெரியாது என்பதை ஏற்க முடியாது': நீதிபதி பேச்சு
"சட்டம் தெரியாது என்பதை ஏற்க முடியாது': நீதிபதி பேச்சு
"சட்டம் தெரியாது என்பதை ஏற்க முடியாது': நீதிபதி பேச்சு
"சட்டம் தெரியாது என்பதை ஏற்க முடியாது': நீதிபதி பேச்சு
ADDED : செப் 09, 2011 01:22 AM
மதுரை : ''சட்டங்கள் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டம் தெரியாது என்பதை ஏற்க முடியாது,'' என, மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ஆர்.ஸ்ரீதரன் கூறினார். ஆணைக்குழு மற்றும் சமூக வளர்ச்சி சமுதாய மாற்றத்திற்கான அறக்கட்டளை சார்பில் பொதும்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் தங்கமாரியப்பன் தலைமை வகித்தார். சார்பு-நீதிபதி கருணாநிதி, ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் உமா முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி ஸ்ரீதரன் பேசும்போது, ''நம்முடைய சுதந்திரம் அடுத்தவர் சுதந்திரத்தை பாதித்து விடக்கூடாது. சட்டங்கள் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டம் தெரியாது என்பதை ஏற்க முடியாது,'' என்றார். கிறிஸ்டி நன்றி கூறினார்.