/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காட்டேரிக்குப்பத்தில் வளையல் அணி விழாகாட்டேரிக்குப்பத்தில் வளையல் அணி விழா
காட்டேரிக்குப்பத்தில் வளையல் அணி விழா
காட்டேரிக்குப்பத்தில் வளையல் அணி விழா
காட்டேரிக்குப்பத்தில் வளையல் அணி விழா
ADDED : செப் 09, 2011 12:16 AM
புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணி விழா நடந்தது.
மருத்துவ அதிகாரி ஆனந்தி சங்கர் வரவேற்றார். சித்த மருத்துவர் சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் வேலுவீரமுனீஸ்வரி, கிராம சுகாதார செவிலியர்கள், ஊர் பெண்கள் பலர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தனர். மேலும் அவர்கள் கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பேறுகால கவனிப்பு, மருத்துவம், தடுப்பூசி, சத்துணவு குறித்தும் எடுத்துரைத்தனர். நிறைவாக கர்ப்பணிகளுக்கு திருஷ்டி நீங்க ஆரத்தி எடுக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பிளாக் கண்காணிப்பாளர் ராகவன் செய்திருந்தார்.