பயிர்கடன் டிசம்பருக்குள் வழங்க உத்தரவு
பயிர்கடன் டிசம்பருக்குள் வழங்க உத்தரவு
பயிர்கடன் டிசம்பருக்குள் வழங்க உத்தரவு
ADDED : செப் 06, 2011 11:50 PM
ராமநாதபுரம்: கூட்டுறவு வங்கிகள் மூலம்,வழங்கப்படும் பயிர்க்கடன் மூவாயிரம் கோடி ரூபாயை, வரும் டிசம்பருக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற்றவர்கள், உரிய காலத்தில் திருப்பி செலுத்தும் பட்சத்தில், அவர்களுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இதற்கு மூவாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக சேலம் மாவட்டத்துக்கு 261.20 கோடி, குறைந்த பட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 45 கோடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 85.35 மெட்ரிக்., டன் தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நிதியாண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன் தானிய உற்பத்தி என்ற இலக்கை அடைய அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், இரண்டாம் பசுமை புரட்சியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை தரப்பட உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு டிசம்பருக்குள் பயிர்க்கடன் வழங்கி, உற்பத்தியை பெருக்க முயற்சி எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒதுக்கிய தொகையில், கடந்த ஆகஸ்ட் வரை ஐந்து கோடியே ஐந்து லட்சம் ரூபாய் பயிர்கடனாக வழங்கப்பட்டுள்ளது.