/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி ஒட்டுச்சாவடிகளை இறுதி செய்வதில் புதிய சிக்கல்உள்ளாட்சி ஒட்டுச்சாவடிகளை இறுதி செய்வதில் புதிய சிக்கல்
உள்ளாட்சி ஒட்டுச்சாவடிகளை இறுதி செய்வதில் புதிய சிக்கல்
உள்ளாட்சி ஒட்டுச்சாவடிகளை இறுதி செய்வதில் புதிய சிக்கல்
உள்ளாட்சி ஒட்டுச்சாவடிகளை இறுதி செய்வதில் புதிய சிக்கல்
ADDED : செப் 06, 2011 10:44 PM
தேனி : உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகளை இறுதி செய்வதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தயாராகி உள்ளது.
பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கொடுத்து, கருத்து கேட்ட பிறகே இறுதி செய்ய வேண்டும். செப்., 10க்குள் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு, பட்டியலை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு பட்டியல் விபரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்கள் ஆய்வு செய்து, கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்க வேண்டும். இதற்கான அவகாசம் தரப்படவில்லை. இதனால் ஓட்டுச்சாவடி பட்டியலை இறுதி செய்து வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.