/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மரம் திருட்டு: கலெக்டருக்கு புகார் மனுமரம் திருட்டு: கலெக்டருக்கு புகார் மனு
மரம் திருட்டு: கலெக்டருக்கு புகார் மனு
மரம் திருட்டு: கலெக்டருக்கு புகார் மனு
மரம் திருட்டு: கலெக்டருக்கு புகார் மனு
செஞ்சி : செஞ்சி அருகே 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேப்ப மரத்தை இரவோடு இரவாக வெட்டி எடுத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வி.ஏ.ஓ., விடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். செஞ்சி பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படும் போது ஒப்புக்கு அபராதம் விதிக்கின்றனர். அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தை போல் 10 மடங்கு மதிப்புடைய மரங்களை திருடி விற்பனை செய்பவர்களுக்கு அபராதத்தினால் எந்த நஷ் டமும் ஏற்படுவதில்லை. எனவே மரத்தை திருடியதற்காக அபராதம் விதிப் பதை அதிகாரிகள் தவிர்த்து விட்டு, திருடி சென்ற மரங் களை பறிமுதல் செய்வதுடன், அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூடுவாம்பூண்டி கிராம மக்கள் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.