/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/லாரியில் இருந்து சரிந்த கண்ணாடிகளால் மரப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்புலாரியில் இருந்து சரிந்த கண்ணாடிகளால் மரப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு
லாரியில் இருந்து சரிந்த கண்ணாடிகளால் மரப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு
லாரியில் இருந்து சரிந்த கண்ணாடிகளால் மரப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு
லாரியில் இருந்து சரிந்த கண்ணாடிகளால் மரப்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 06, 2011 01:02 AM
புதுச்சேரி: லாரியிலிருந்து கண்ணா டிகள் சரிந்து விழுந்ததால், மரப்பாலம் சந்திப்பில் போக்குவரத்து பாதித்தது.
கன்னியக் கோவிலில் உள்ள தனியார் கண்ணாடி தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக, வீடுகள், தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு சென்னையிலிருந்து லாரி ஒன்று புதுச்சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. மரப்பாலம் சிக்னல் பகுதியைக் கடந்த போது, கண்ணாடிகளை தாங்கியிருந்த இரும்பு சேனல்கள் திடீரென உடைந்தன. இதனால், லாரியில் செங்குத்து வரிசையில் அடுக்கப்பட்டிருந்த மெகா சைஸ் கண்ணாடிகள், நடு ரோட்டில் சரிந்து விழுந்தன. துண்டுத்துண்டாக சிதறிய கண்ணாடிகள் சாலையில் சிதறியதால், போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, சாலையில் சிதறிய கண்ணாடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.