/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நகராட்சியில் இரவு துப்புரவு பணி: பொதுமக்களிடம் வரவேற்புநகராட்சியில் இரவு துப்புரவு பணி: பொதுமக்களிடம் வரவேற்பு
நகராட்சியில் இரவு துப்புரவு பணி: பொதுமக்களிடம் வரவேற்பு
நகராட்சியில் இரவு துப்புரவு பணி: பொதுமக்களிடம் வரவேற்பு
நகராட்சியில் இரவு துப்புரவு பணி: பொதுமக்களிடம் வரவேற்பு
ADDED : செப் 05, 2011 11:46 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி சார்பில் இரவு கூட்டு துப்புரவு பணி நடந்தது.
விருத்தாசலம் நகர பகுதியில் மாதம் இரண்டு முறை இரவு நேரத்தில் கூட்டு துப்புரவு பணி செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நகராட்சி துப்புரவு ஊழியர்கள் துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், பாஸ்கர் முன்னிலையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலின் நான்கு வீதிகள் மற்றும் கடைவீதி, ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் விடிய விடிய குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தினர். மேற்பார்வையாளர்கள் ஆறுமுகம், முத்தமிழன், முத்தமிழ்செல்வன், சுப்ரமணியன் பணிகளை மேற்பார்வை செய்தனர். பகல் நேரங்களில் குப்பைகளை அள்ளாமல் இரவு நேரத்தில் குப்பைகளை அள்ளியதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்த இடையூறும் ஏற்படாததால் பொதுமக்களிடம் இரவு நேர துப்புரவு பணி வரவேற்பை பெற்றது.