/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மணல் லாரிகளால் வியாபாரிகள் கடும் பாதிப்புமணல் லாரிகளால் வியாபாரிகள் கடும் பாதிப்பு
மணல் லாரிகளால் வியாபாரிகள் கடும் பாதிப்பு
மணல் லாரிகளால் வியாபாரிகள் கடும் பாதிப்பு
மணல் லாரிகளால் வியாபாரிகள் கடும் பாதிப்பு
ADDED : செப் 04, 2011 11:21 PM
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் கடைவீதிகளின் வழியே 500க்கும் மேற்பட்ட லாரிகள் புழுதி பறக்க செல்வதால் வியாபாரிகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மாரங்கியூரில் நீண்டகாலமாக மணல் குவாரி செயல்படுகிறது. இத்துடன் புதியதாக அண்டராயநல்லூரில் மணல் விற்பனை நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களில் தினமும் மணல் ஏற்றவரும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதி வழியே செல்வதால் சாலை மோசமாகி புழுதி பறக்கிறது. இதனால் கடைகளில் உள்ள மருந்துகள் மற்றும் உணவுப் பண்டங்கள் மீது புழுதி படிந்து விடுகிறது. இத்துடன் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் லாரிகளால் புழுதிபறப்பதால் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். லாரிகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைவீதியின் வழியே லாரிகள் செல்ல தடை விதிக்கக் கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவித்ததால் திருக்கோவிலூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைதிக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை மணல் லாரிகள் கடை வீதி வழியே செல்ல தடைவிதிக்கவில்லை. திருவெண்ணெய்நல்லூர் கடை வீதி வழியே மணல் லாரிகள் செல்வதை தடை செய்ய வேண்டும். மாற்று ஏற்பாடாக மோசமாக மாறிய சாலைகளை சீரமைத்துவிட்டு மணல் லாரிகளை இயக்கவேண்டும்.