ADDED : செப் 04, 2011 01:59 AM
பண்ருட்டி:பண்ருட்டி தாலுகா நுகர்வோர் மக்கள் நலச் சங்க பொதுக்குழுக்
கூட்டம் நடந்தது.சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார்.
கவுரவத்
தலைவர் தெய்வசிகாமணி, சையது இஸ்மாயில், எழுமலை முன்னிலை வகித்தனர்.ரோட்டரி
சங்கத் தலைவர் மதன்சந்த் சிறப்புரையாற்றினார். தேசிய ஊரக வேலை
உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் பணம் வழங்க வேண்டும்.
கடலூர், விழுப்புரத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது உட்பட பல
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.