/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சி செயற் பொறியாளராக நியமிக்கக்கோரி அதிகாரி மனு : ஐகோர்ட் கிளை தள்ளுபடிமாநகராட்சி செயற் பொறியாளராக நியமிக்கக்கோரி அதிகாரி மனு : ஐகோர்ட் கிளை தள்ளுபடி
மாநகராட்சி செயற் பொறியாளராக நியமிக்கக்கோரி அதிகாரி மனு : ஐகோர்ட் கிளை தள்ளுபடி
மாநகராட்சி செயற் பொறியாளராக நியமிக்கக்கோரி அதிகாரி மனு : ஐகோர்ட் கிளை தள்ளுபடி
மாநகராட்சி செயற் பொறியாளராக நியமிக்கக்கோரி அதிகாரி மனு : ஐகோர்ட் கிளை தள்ளுபடி
ADDED : செப் 04, 2011 01:20 AM
மதுரை : மதுரை மாநகராட்சி செயற் பொறியாளராக நியமிக்க கோரி முன்னாள் முதன்மை நகரமைப்பு அதிகாரி முருகேசன் தாக்கல் செய்த ரிட் மனுவை, ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை மாநகராட்சி(திட்டம்) செயற் பொறியாளராக ராக்கப்பன் என்பவரை நியமித்து நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை செல்லாது என அறிவிக்க கோரி முருகேசன், ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தார். மேலும் மனுவில், ''நகராட்சி இன்ஜினியரிங், குடிநீர் சப்ளை சேவை விதிகள் 1996ன் கீழ், ராக்கப்பனை செயற் பொறியாளராக நியமிக்க முடியாது. மதுரை மாநகராட்சி செயற் பொறியாளராக 2005 ஆக., 11 முதல் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறேன். மாநகராட்சியிலும், என்னை நியமிக்க 2009 ஜூன் 30ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை செயற் பொறியாளராக நியமிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி வக்கீல் எம்.ரவிச்சங்கர், ''ராக்கப்பனை நியமித்ததில் விதி மீறல் இல்லை. மனு நிலைநிற்கத்தக்கது அல்ல,'' என்றார். அதை ஏற்று, ரிட் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.