Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/சாலைகளை சீரமைக்க கோரி மணல் லாரிகள் சிறைபிடிப்பு

சாலைகளை சீரமைக்க கோரி மணல் லாரிகள் சிறைபிடிப்பு

சாலைகளை சீரமைக்க கோரி மணல் லாரிகள் சிறைபிடிப்பு

சாலைகளை சீரமைக்க கோரி மணல் லாரிகள் சிறைபிடிப்பு

ADDED : செப் 04, 2011 12:18 AM


Google News

பாபநாசம்: பாபநாசம் அருகே மணல் லாரிகளால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள், மணல் லாரிகளை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாபநாசம் அருகே வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் அரசுக்கு சொந்தமான மணல் குவாரி உள்ளது. இங்கு தினமும் மணல் ஏற்றிய லாரிகள் தேவன்குடி மணலூர் வழியாக திருவையாறு நெடுஞ்சாலையை அடைந்து, அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு மணல் லாரிகள் சென்று வருகிறது. இந்நிலையில் வீரமாங்குடி முதல் மணலூர், காணியிருப்பு வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக சேறும் சகிதமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.



இதனால் லாரிகள் செல்லும் போது, தண்ணீரும், மணல் சேறும் கலந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீதும், வீட்டிற்குள்ளும் வாரி அடிக்கின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவன்குடி கிராம மக்கள், வீரமாங்குடி குவாரியிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரிகளை திடீரென்று நேற்று சிறை பிடித்தனர்.



தகவலறிந்த பாபநாசம் தாசில்தார் பாண்டியராஜன். துணை தாசில்தார் பக்கிரிசாமி, ஆர். ஐ. பழனியப்பன், கபிஸ்தலம் எஸ்.ஐ. கவிதா,ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிய சாலை போடும் வரை, சேதம் அடைந்த சாலையில் உள்ள குண்டும் குழியுமான பகுதிகளை மணல் குவாரி நிர்வாகிகள் மணலைகொட்டி சமபடுத்துவது என்று முடிவெடுத்தன் காரணமாக, கிராம பொதுமக்கள் மணல் லாரிகளை விடுவித்தனர். கிராமமக்களின் சிறைப்பிடிப்பால் மணல் லாரிகள் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us