/உள்ளூர் செய்திகள்/கரூர்/மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாமகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
ADDED : செப் 03, 2011 12:38 AM
குளித்தலை: தோகைமலையில் ஐ.ஓ.பி., கிளையில் கடன் வழங்கும் விழா மாவட்ட திட்ட இயக்குநர் முருகன் தலைமையில் நடந்தது.
விழாவில் தரகம்பட்டி, குளித்தலை, நெய்தலூர், நச்சலூர் மற்றும் தோகைமலை ஆகிய ஐந்து ஐ.ஓ.பி., கிளை சார்பில் விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் மகளிர் சுய குழுக்களுக்கு திண்டுக்கல் மண்டல ஐ.ஓ.பி., முதன்மை மேலாளர் அன்பு 88 லட்ச ரூபாய் மதிப்பில் கடன் வழங்கினார். கரூர் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பார்த்திபன், கரூர் வேளாண்மை இணை இயக்குனர் ஜெகதீசன், கரூர் ஐ.ஓ.பி., மாவட்ட பயிற்சி இயக்குனர் ஜெயராமன், வங்கி மேலாளர்கள் ஜெயக்குமார், கனிக்கண்ணன், பாஸ்கரன், ரங்கநாதன், யூனியன் பி.டி.ஓ., முரளிகண்ணன், ஏ.பி.டி.ஓ., புவனேஸ்வரி, தோகமலை ஐ.ஓ.பி., முதுநிலை மேலாளர் ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.