/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/சாலைப்பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வுசாலைப்பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
சாலைப்பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
சாலைப்பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
சாலைப்பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 01, 2011 01:39 AM
பெரம்பலூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூõர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலகத்தில் மாவட்ட சாலைப்பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சண்முகராஜன் தலைமையில், மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் முன்னிலையில் நடந்தது.
இதில் சங்கத்தின் செயல்பாடுகள், பணிகள், மேற்கொள்ளவேண்டிய நிலைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் சங்க புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டதலைவராக செல்வராஜ், செயலாளராக சுப்ரமணியன், பொருளாளராக சுரேஷ் ஆகியோரும், துணை தலைவர்களாக கருணாநிதி, உதயக்குமார், இணை செயலாளர்களாக முத்துசாமி, பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினராக பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக கோவிந்தராஜ், பெருமாள், சுப்ரமணியன், மணிவேல், பழனிசாமி, பெருமாள்சாமி, ராமசாமி, அண்ணாதுரை, செல்லசாமி, கணேசமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.