ADDED : செப் 01, 2011 01:33 AM
நெட்டப்பாக்கம் : மடுகரை குரு நகர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் ஆவணி மாத சுதர்சன ஹோமம் நடந்தது.
விழாவையொட்டி மூலவருக்கு தைலக்காப்பு, உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து ராமானுஜ பஜனை சபா குழுவினரால் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.