குருவாயூர் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு முதல்வர் தலைமையில் 19ம் தேதி கூட்டம்
குருவாயூர் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு முதல்வர் தலைமையில் 19ம் தேதி கூட்டம்
குருவாயூர் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு முதல்வர் தலைமையில் 19ம் தேதி கூட்டம்
ADDED : ஆக 31, 2011 11:46 PM

குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்து, முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில், வரும் 19ம் தேதி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவிலுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது குறித்து, ஏற்கனவே போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் குருவாயூர் தேவஸ்வம் அதிகாரிகள் மட்டத்திலான, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம், கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்த மாநில தேவஸ்வம் துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், 'கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, வரும் 19ம் தேதி முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில் தேவஸ்வம் துறை அமைச்சர், அதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகள் என, பலரும் கலந்துகொள்வர். பக்தர்கள் கிழக்குக் கோபுரம் வழியாக, கோவிலுக்குள் சென்று தரிசனம் முடிந்து, மேற்கு கோபுர வாசல் வழியாக, வெளியே செல்லும் வகையில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். மேலும், பகவதி கோவில் அருகே உள்ள வாசல் அடைக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு எந்தவகையிலும் பாதிப்போ, இடையூறோ இல்லாத வண்ணம் இருக்கும். பாதுகாப்பு விஷயத்தில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.கோவில் மதில் சுவர்களில் முள்வேலி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார்.