ADDED : ஆக 29, 2011 12:38 AM
நாகமலை : வடபழஞ்சி செந்தாமரை கலை அறிவியல் கல்லூரியில் மதுரை காமராஜ் பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கு இடையேயான பி மண்டல கோ கோ போட்டிகள் நடந்தன.
துவக்க விழாவில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால் வரவேற்றார். முதல்வர் செந்தூர்பாண்டி துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடந்த போட்டிகளின் இறுதியில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி அணி முதலிடத்தையும், மதுரை கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்வர் செந்தூர் பாண்டி பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஜெயதங்கம் செய்திருந்தார்.