ADDED : ஆக 28, 2011 11:18 PM
சங்கராபுரம் : விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சங்கராபுரத்தில் கோவில்களில் விஷேச பூஜைகளும், பொது மக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சங்கராபுரம் ஒன்றிய நகர தே.மு.தி.க., சார்பில் கடைவீதியில் உள்ள விநாயகர் கோவிலில் விஷேச பூஜை நடந்தது. ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் நகர அவைத் தலைவர் சுதாகர் இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். ராஜ்குமார், முருகன், உமர்பாஷா, சின்னசாமி, ஆறுமுகம், அன்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.