/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சிந்தனையை முடக்கும் "டிவி' குன்றக்குடி அடிகள் பேச்சுசிந்தனையை முடக்கும் "டிவி' குன்றக்குடி அடிகள் பேச்சு
சிந்தனையை முடக்கும் "டிவி' குன்றக்குடி அடிகள் பேச்சு
சிந்தனையை முடக்கும் "டிவி' குன்றக்குடி அடிகள் பேச்சு
சிந்தனையை முடக்கும் "டிவி' குன்றக்குடி அடிகள் பேச்சு
ADDED : ஆக 28, 2011 10:13 PM
காந்திகிராமம் : ''சிந்தனைகளை செயலிழக்க செய்யும்'டிவி', மொபைல் போன் பிடியில் சிக்காமல், தவிர்க்கும் திறன் பெற்ற மாணவர்கள் தான் வெற்றி பெறுவர்,'' என, குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினார்.உயர்கல்வியில் குருகுல அமைப்பின் முக்கியத்துவம் குறித்த கருதரங்கு நடந்தது.அடிகள் பேசியது: தன்னிடம் உள்ள குறைகளை மறைத்தும், பிறரது குறைகளை மிகைப்படுத்தியும் பேசும் போக்கு வளர்ந்துள்ளது.
நல்ல சிந்தனைகளை மனதில் வளர்க்க வேண்டும். வெறும் சிந்தனைகள் மனித வாழ்வில் தேக்க நிலையை ஏற்படுத்தும். சிந்தனைகள் செயலாக்கம் பெற்றால்தான் ஆக்க நிலை உருவாகும். கல்வியில் உயர்ந்த நிலை யை அடைய, மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். சிந்தனைகளை சிதற வைத்து செயலிழக்க செய்யும் 'டிவி' மற்றும் மொபைல் போன் ஆகியவற்றின் பிடியில் சிக்காமல், தவிர்த்து விடும் திறன் பெற்ற மாணவர்கள் தான், சாதனையாளர்களாக முடியும்,'' என்றார்.துணைவேந்தர் ராமசாமி, பதிவாளர் நாராயணசாமி, பேராசிரியர் ஆறுமுகம் பங்கேற்றனர்.