ADDED : ஆக 25, 2011 11:30 PM
கீழக்கரை : கீழக்கரையில் ரோட்டரி சங்கம் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி
சார்பில் ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் இப்தார் நிகழ்ச்சி ரோட்டரி
சங்க தலைவர் செய்யது இபுறாகிம் தலைமையில் நடந்தது.
கைராத்துல் ஜலாலியா
மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் சாதிக், கீழக்கரை ரோட்டரி சங்க செயலாளர்
சுப்பிரமணியன், சமத்துவ மக்கள் கட்சி மதுரை மண்டல செயலாளர் ஈஸ்வரன், மதுரை
நகர் செயலாளர் ஜெயக்குமார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித்,
கீழக்கரை நகர் செயலாளர் பந்தே நவாஸ், மாவட்ட அவைத் தலைவர் சுப கோவிந்த்,
பொருளாளர் முனியசாமி, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ஆனந்த் கலந்து
கொண்டனர்.