/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் விழிப்புணர்வு முகாம்விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் விழிப்புணர்வு முகாம்
விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் விழிப்புணர்வு முகாம்
விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் விழிப்புணர்வு முகாம்
விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 24, 2011 01:11 AM
கும்பகோணம்: மணஞ்சேரி கிராமத்தில் விதை கிராமத்திட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உதவியுடன் நடைபெறும் விதைகிராமத்திட்டத்தின் கீழ் பாபநாசம் அருகே மணஞ்சேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு தரமான நெல் விதை உற்பத்தி முறைகள் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஜெயராஜ் முகாமிற்கு தலைமை வகித்து விதை கிராமத்திட்ட செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டம் குறித்து விளக்கமளித்தார். உழவியல் துறை பேராசிரியர் பன்னீர்செல்வம் நெல் விதை உற்பத்திக்கு நாற்றங்கால் தேர்வு மற்றும் பராமரிப்பு பற்றி விளக்கினார். பூச்சியியல் துறை பேராசிரியர் சோழன், நன்கு வாளிப்பான நாற்றுகளை பெறுவதற்கான சூடோமோனஸ் விதை நேர்த்தி மற்றும் நாற்றங்காலில் பூச்சி கட்டுபாட்டு வழிமுறைகள் பற்றி விளக்கினார். பாபநாசம் வேளாண் உதவி இயக்குனர் நெடுஞ்செழியன் பேசினார். முகாமில் 30 முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் உதவி அலுவலர் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இத்திட்டத்தில் பங்குபெறும் 30 விவசாயிகளுக்கு 20 கிலோ வீதம் பொன்மணி நெல் ரக சான்று விதை வழங்கப்பட்டது. முன்னதாக விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் ராஜா அனைவரையும் வரவேற்றார். ஏற்பாடுகளை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தினர் செய்திருந்தனர்.


