/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மயில்கள் நடமாடும் பகுதியில் எச்சரிக்கை பலகைகள்மயில்கள் நடமாடும் பகுதியில் எச்சரிக்கை பலகைகள்
மயில்கள் நடமாடும் பகுதியில் எச்சரிக்கை பலகைகள்
மயில்கள் நடமாடும் பகுதியில் எச்சரிக்கை பலகைகள்
மயில்கள் நடமாடும் பகுதியில் எச்சரிக்கை பலகைகள்
ADDED : ஆக 24, 2011 12:15 AM
ராமநாதபுரம்:கீழக்கரை முள்ளுவாடி அருகே மயில் மர்மமாக இறந்தது குறித்த,
'தினமலர் இதழ் செய்தி எதிரொலியாக' மயில்கள் நடமாடும் பகுதியில், எச்சரிக்கை
போர்டுகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில்
சாயல்குடி, கீழக்கரை, திருப்புல்லாணி, பாம்பன், நயினார்கோவில், சிக்கல்,
இதம்பாடல் ஆகிய பகுதிகளில் மயில்கள் உள்ளன. கீழக்கரை முள்ளுவாடி அருகே தலை
இல்லாத நிலையில் மயில் இறந்து கிடந்தது குறித்து தினமலர் இதழில் செய்தி
வெளியானது.
செய்தி எதிரொலியாக மயில்களை பாதுகாக்க வேண்டிய, நடவடிக்கைகளை மாவட்ட
வனத்துறை எடுத்துள்ளது. மாவட்ட உதவி வன பாதுகாவலர் ராஜேந்திரன் கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வெயில் ஏறும்போது, மயில்கள் இடம் விட்டு,
இடம் பெயரும். ரோட்டை கடக்கும்போது விபத்து ஏற்படுவதை தடுக்க மயில்கள்,
பறவைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை கணக்கெடுத்து, அப்பகுதியில் எச்சரிக்கை
பலகை வைக்கப்படும். இதனால் மயில்களின் அழிவை தடுக்க முடியும், என்றார்.