பரமக்குடி: பரமக்குடி நகராட்சி கூட்ட அரங்கில் கலெக்டர் அருண்ராய் தலைமையில் பரமக்குடி நகரின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சுந்தரராஜ் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் கீர்த்திகா, துணைத் தலைவர் பாபுஜி, ஜெயராமன் டி.ஆர்.ஓ., மீராபரமேஸ்வரி ஆர்.டி. ஓ., நகராட்சி கமிஷனர் அட்சயா, தாசில்தார் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.