யு.பி.எஸ்.சி., தேர்வு மையத்தில் ஹிந்தி அறிவிப்பால் சர்ச்சை
யு.பி.எஸ்.சி., தேர்வு மையத்தில் ஹிந்தி அறிவிப்பால் சர்ச்சை
யு.பி.எஸ்.சி., தேர்வு மையத்தில் ஹிந்தி அறிவிப்பால் சர்ச்சை
ADDED : மே 26, 2025 05:14 AM

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது.
காலை, மாலை என, இரு வேளைகளில் முதல்நிலை தேர்வு நடந்தது.
அந்த வகையில், சென்னையில் 69 இடங்களில் நடந்த தேர்வில், 24,364 பேர் பங்கேற்றனர். தேர்வர்களுக்கு உதவும் வகையில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என, இரு மொழிகளில் அறிவிப்பாணைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஆனால், சென்னை மண்ணடி, நாராயணப்பா தெருவில் உள்ள மையத்தில், தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஹிந்தி மொழியில் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். வழிகாட்டு நெறிமுறையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டனர்.