/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சின்னசேலம் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழாசின்னசேலம் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
சின்னசேலம் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
சின்னசேலம் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
சின்னசேலம் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 23, 2011 11:47 PM
சின்னசேலம் : சின்னசேலம் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கொண்டாடப்பட்டது.சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடி விழாவும்,
வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சியும் நடந்தது. கிருஷ்ணர் சுவாமி வீதியுலா
நடந்தது. தொடர்ந்து மா விளக்கு பூஜையும், இரவு சுவாமி சிறப்பு
அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா
நடந்தது. கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சந்தான கோபால கிருஷ்ணணுக்கு
சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடந்தன. உறியடி நிகழ்ச்சியை நிர்வாக தலைவர்
கோவிந்தசாமி துவக்கி வைத்தார். கட்டளைதாரர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்
தனர்.