/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கவுன்சிலிங் நடத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்கவுன்சிலிங் நடத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கவுன்சிலிங் நடத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கவுன்சிலிங் நடத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கவுன்சிலிங் நடத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2011 11:47 PM
விழுப்புரம் : தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்
மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம்
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர்
சீனுவாசன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் செந்தில்குமார், அமைப்பு
செயலாளர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர்களுக்கு
வெளிப்படையான, முறையான மாறுதல் கலந்தாய்வு உடனே நடத்த வேண்டும் மற்றும்
பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட செயலாளர் பழனி,
பொதுக்குழு உறுப்பினர்கள் முருகவேல், செல்வராஜ் உட்பட பலர் பேசினர். இதில்,
சங்க நிர்வாகிகள் சுந்தரம், பாலசுப்ரமணியம், பாபு, சுந்தரவடிவேல்,
ராஜேந்திரன், சிவசுப்ரமணியன், கோவிந்தசாமி, சுந்தர் ராஜன், சேதுராமன்,
மணிசேகரன் கலந்து கொண்டனர்.