/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சங்கராபுரத்தில் பெண் மர்ம சாவு : மறியல்சங்கராபுரத்தில் பெண் மர்ம சாவு : மறியல்
சங்கராபுரத்தில் பெண் மர்ம சாவு : மறியல்
சங்கராபுரத்தில் பெண் மர்ம சாவு : மறியல்
சங்கராபுரத்தில் பெண் மர்ம சாவு : மறியல்
ADDED : ஆக 23, 2011 11:47 PM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்ததால்
பொதுமக் கள் மறியலில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் அடுத்துள்ள உலகுடையாம்பட்டு
கிராமத்தை சேர்ந்தவர் அரியபுத்திரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து
வருகிறார். இவரது மகள் வளர்மதி,25 என்பவருக்கும் சங்கராபுரத்தை சேர்ந்த
கோட்டையான் மகன் சண்முகத்திற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம்
செய்து வைத்தனர். இவர்களுக்கு ஷாலினி,5 என்ற மகள் உள்ளார். நேற்று
முன்தினம் வளர்மதி தனது வீட்டில் தூக்கு போட்டு இறந்ததாக கிடைத்த தகவலின்
பேரில் சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வளர்மதியின் சாவில்
சந்தேகம் இருப்பதாக அவ ரது தாய் சரோஜா போலீசில் புகார் செய்தார். சம்பவ
இடத்தை திருக்கோவிலூர் டி.எஸ்.பி., லோகநாதன் பார்வையிட்டு விசா ரணை
மேற்கொண்டார். புகாரின் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து
வளர்மதியின் தாய் சரோஜா தலைமையில் உலகுடையாம் பட்டு கிராம மக்கள்
100க்கும் மேற்பட்டோர் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் நேற்று
பகல் 12 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உடனடி நடவடிக்கை
எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.