/உள்ளூர் செய்திகள்/சென்னை/லிப்ட் வசதியுடன் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்லிப்ட் வசதியுடன் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்
லிப்ட் வசதியுடன் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்
லிப்ட் வசதியுடன் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்
லிப்ட் வசதியுடன் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்
ADDED : ஆக 23, 2011 11:44 PM
சென்னை:கிரீம்ஸ் சாலையில், லிப்ட் வசதியுடன் கூடிய அடுக்குமாடி வாகன
நிறுத்துமிடம் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பொதுப்
பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.சென்னை மாநகரில் அதிகரித்து வரும் வாகன
நெரிசல் காரணமாக, வாகன நிறுத்துமிடத்துக்கு, பெரும் நெருக்கடி
ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க,
மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், ஒரு பகுதியாக, லிப்ட் வசதியுடன்
கூடிய வாகன நிறுத்துமிடத்தை, கிரீம்ஸ் சாலையில் அமைக்கிறது.இங்கு, 2,200
சதுர மீட்டர் பரப்பில், ஒரே நேரத்தில், 200 நான்கு சக்கர வாகனங்களும், 300
இரு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும். தரைத் தளத்தில், வாகனத்தை
நிறுத்தினால், லிப்ட் மூலம் மேல் தளத்துக்கு கொண்டு செல்வர்.அதேபோல், மேல்
தளத்திலிருக்கும், வாகனத்தை, லிப்ட் மூலம் கீழ் கொண்டு வந்து, வாகன
உரிமையாளரிடம் அளிப்பர். ஒரு சில நிமிடங்களில், வாகனங்களை நிறுத்தவும்,
எடுத்து செல்லவும், லிப்ட் வசதி பெரும் துணையாக இருக்கும்.
இந்த வசதி,
நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது என, மாநகராட்சி
அதிகாரிகள் கூறுகின்றனர்.இந்த வாகன நிறுத்துமிடத்தில், நான்கு சக்கர
வாகனத்துக்கு முதல் ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு மணி
நேரத்துக்கும் 10 ரூபாய் வாடகை வசூலிக்கப்படும். இரு சக்கர வாகனத்துக்கு,
ஒரு மணி நேரத்துக்கு, 5 ரூபாய். மாதந்திர கட்டணம் 500 ரூபாய்.இதுகுறித்து,
மேயர் சுப்ரமணியன் கூறும்போது,' கட்டுமானம், பராமரித்தல், ஒப்படைத்தல் என்ற
திட்டத்தில், திட்டம் நிறைவேற்றப்படுகிறது. சலுகை கட்டுமான காலமான, 2
ஆண்டையும் சேர்த்து, 20 ஆண்டுகள் ஒப்பந்தக் காலம். ஒப்பந்த காலத்தில்,
ஆண்டுக்கு 46 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தக்
கட் டணம், 5 சதவீதம் உயர்த்தப்படும். கிரீம்ஸ் சாலையைத் தொடர்ந்து, வாலஸ்
தோட்டம், பிராட்வே பேருந்து நிலையம் பகுதிகளிலும் அடுக்குமாடி வாகன
நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது' என்றார்.