ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுங்கள்: மாயாவதி வலியுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுங்கள்: மாயாவதி வலியுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுங்கள்: மாயாவதி வலியுறுத்தல்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு சரியில்லை
பின்னர் மாயாவதி பேசியதாவது: ஆம்ஸ்ட்ராங் மறைவு செய்தி கேட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.
சி.பி.ஐ., விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். மாநில அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
பாதுகாப்பு
பட்டியலின மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
திருவள்ளூரில் அடக்கம் செய்ய அனுமதி
ஆம்ஸ்டிராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டு, அவரது மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.