/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஆம்னி பஸ்ஸில் 350 வெளிமாநில மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைதுஆம்னி பஸ்ஸில் 350 வெளிமாநில மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது
ஆம்னி பஸ்ஸில் 350 வெளிமாநில மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது
ஆம்னி பஸ்ஸில் 350 வெளிமாநில மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது
ஆம்னி பஸ்ஸில் 350 வெளிமாநில மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது
ADDED : ஆக 23, 2011 01:15 AM
திருச்சி: ஆம்னி பஸ்ஸில் கடத்தி வரப்பட்ட, 350 வெளிமாநில மதுபாட்டில்களை திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்க போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரூவிலிருந்து, ஆம்னி பஸ்களில் தொடர்ந்து வெளிமாநில மதுபாட்டில் திருச்சிக்கு கடத்தி வரப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்க போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரூவிலிருந்து திருச்சி வந்த, பர்வீன் டிராவல்ஸூக்கு சொந்தமான ஆம்னி பஸ்ஸை மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., அழகம்மாள் உள்ளிட்ட போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது பஸ்ஸிலிருந்து பெயிண்ட் பேரல்களை மீது எழுந்த சந்தேகத்தையடுத்து அந்த பேரல்களை போலீஸார் திறந்து சோதனை நடத்தினர்.
பேரல்களின் உள்ளே, 'புல்' பாட்டில்கள் வரிசையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பஸ்ஸிலிருந்து ஏழு பேரல்களையும் திறந்து சோதனையிட்டதில், ஒவ்வொரு பேரல்களிலும் தலா, 50 மதுபான பாட்டில் வீதம் ஏழு பேரல்களில் மொத்தம், 350 வெளிமாநில மதுபாட்டில் இருந்தது. அதை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய் என்று, மாநகர மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர். வெளிமாநில மதுபாட்டில்களை திருச்சிக்கு கடத்தி வந்ததாக முசிறியைச் சேர்ந்த மகாதேவன் (30), விநாயகமூர்த்தி (32) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மதுபான பாட்டில் கடத்தலில் முக்கிய புள்ளிகள் யாரும் சம்மந்தப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.