/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மூதாட்டியிடம் வழிப்பறி முயற்சி : பெண்ணிடம் போலீஸ் விசாரணைமூதாட்டியிடம் வழிப்பறி முயற்சி : பெண்ணிடம் போலீஸ் விசாரணை
மூதாட்டியிடம் வழிப்பறி முயற்சி : பெண்ணிடம் போலீஸ் விசாரணை
மூதாட்டியிடம் வழிப்பறி முயற்சி : பெண்ணிடம் போலீஸ் விசாரணை
மூதாட்டியிடம் வழிப்பறி முயற்சி : பெண்ணிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 22, 2011 02:34 AM
துறையூர்: துறையூரில் மூதாட்டியிடம் செயினை பறிக்க முயன்ற பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வலையூரை சேர்ந்தவர் மனோன்மணியம் (70). துறையூர்
அருகே உள்ள அழகாபுரியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு செல்ல, நேற்று
முன்தினம் மதியம் இரண்டு மணிக்கு துறையூர் பஸ்ஸ்டாண்ட்டில் பஸ்ஸூக்கு
காத்திருந்தார். நடந்து வந்த களைப்பில் சற்று நேரம் கண் அயர்ந்தார்.
அப்போது, அவருக்கு அருகில் வந்த ஒரு மர்மப்பெண், அவரது கழுத்தில் இருந்த
நான்கு பவுன் தங்கச்செயினை பறிக்க முயன்றார்.
திடுக்கிட்டு விழித்த மனோன்மணியம் கூச்சலிட்டதில், பஸ்ஸ்டாண்ட்டில் உள்ள
பயணிகள், அப்பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். துறையூர் போலீஸ் ஸ்டேஷனில்
ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே
உள்ள சிறுவயலூர்புதூரை சேர்ந்த பெரியசாமி மனைவி கங்கா (27) என்பது
தெரியவந்தது. கங்கா வேறு யாரிடமுமாவது கைவரிசை காட்டியுள்ளரா? என்பது
குறித்து துறையூர் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்