/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தனியார் கல்லூரி பஸ்ஸை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்புதனியார் கல்லூரி பஸ்ஸை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு
தனியார் கல்லூரி பஸ்ஸை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு
தனியார் கல்லூரி பஸ்ஸை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு
தனியார் கல்லூரி பஸ்ஸை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு
ஓசூர்: ஓசூரில் தனியார் கல்லூரி பஸ்சை வழிமறித்து, தொழிற்சாலை தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.
தொழிலாளிக்கு ஆதரவாக அவருடன் வேலைபார்க்கும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார், தொழிலாளர்களை கைது செய்வதாக எச்சரித்தனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீஸார் விரட்டியடித்தனர். இதற்கிடையில், ஓசூர் பஸ்ஸ்டாண்ட் அருகே கல்லூரி பஸ்ஸுக்காக காத்து நின்ற மாணவ, மாணவிகள் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் பஸ்சை மறித்த தனியார் தொழிலாளர்களை கண்டித்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால், பஸ்ஸ்டாண்ட் அருகேயும் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் மாணவர்களை சமாதானம் செய்து பஸ்ஸை வரவழைத்து கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஹட்கோ போலீஸார், கல்லூரி பஸ்சை வழிமறித்து மறியலில் ரகளையில் ஈடுப்பட்டதாக கூறி அசோக்லேலேண்ட் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால், போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.


