ADDED : ஆக 19, 2011 08:46 PM
சென்னை:''அனுமதியின்றி மின் திருட்டில் ஈடுபட்டவரிடமிருந்து, அபராதம் மற்றும் இழப்பீட்டு தொகையாக, எட்டு லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது'' என, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மேற்கு கே.கே.நகர் , வேம்புலியம்மன் கோவில் ஆகிய பகுதியில், சென்னை தெற்கு அமலாக்கப் பிரிவினர், மின் பகிர்மான அதிகாரிகளுடன் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, கட்டுமானப் பயன்பாட்டிற்கு, தாழ்வழுத்த மின் இணைப்பிலிருந்து மின்சாரம் திருடப்பட்டது தெரிந்தது.மின் திருட்டு இழப்பீட்டு தொகை, 8 லட்சத்து 38 ஆயிரத்து 722 ரூபாய் மற்றும் அபராத தொகை, 46 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, மின் திருட்டில் ஈடுபட்டவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. மேலும், மின் திருட்டு குறித்த தகவல்களை, 94458 57591 என்ற மொபைல் எண் மூலம் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.