ADDED : ஆக 18, 2011 12:00 PM
கரூர்: காங்கிரஸ் அரசின் ஜனநாயக படுகொலையைக் கண்டித்து பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் வரும் 24ம் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில பா.ஜ., தலைவர் பொன்.
ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். கரூரில் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராகவும், இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் ஜனநாயக படுகொலையைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் வரும் 24ம் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.