/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஏர்வாடி அருகே தேசியக்கொடி ஏற்றாத ஆசிரியருக்கு "மெமோ'ஏர்வாடி அருகே தேசியக்கொடி ஏற்றாத ஆசிரியருக்கு "மெமோ'
ஏர்வாடி அருகே தேசியக்கொடி ஏற்றாத ஆசிரியருக்கு "மெமோ'
ஏர்வாடி அருகே தேசியக்கொடி ஏற்றாத ஆசிரியருக்கு "மெமோ'
ஏர்வாடி அருகே தேசியக்கொடி ஏற்றாத ஆசிரியருக்கு "மெமோ'
ADDED : ஆக 16, 2011 11:25 PM
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே ஒன்றிய துவக்கப்பள்ளியில், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற வராத ஆசிரியருக்கு 'மெமோ' வழங்கப்பட்டது.ஏர்வாடி ஊராட்சி தொத்தமகன் வாடி கிராமத்தில் கடலாடி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி மாணவர்கள் 33 பேர் நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவிற்கு காலை 8.30 க்கு வந்தனர். ஆசிரியர் சாமுவேல் வராததால், காலை 10 மணி வரை பள்ளிக்கு வெளியே காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கு வந்த ஆசிரியரை மக்கள் முற்றுகையிட்டு, தேசியக்கொடி ஏற்ற வராதது குறித்து குற்றம் சாட்டினர். பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமுருகன் கூறுகையில், ''கல்வி தரம் குறைந்து விட்டதால் ஏராளமானோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர்,'' என்றார். ஆசிரியர் சாமுவேல் கூறுகையில், ''வெளியூர் சென்ற திரும்பும்போது ஏற்பட்ட தாமதத்தால் பள்ளிக்கு வர முடியவில்லை,'' என்றார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பூலோக சுந்தரவிஜயன் உத்தரவுபடி, கடலாடி உதவி தொடக்க கல்வி அலுவலர் துரைராஜ், பள்ளிக்கு சென்று, நேற்று மதியம் விசாரணை நடத்தினார். பின் ஆசிரியர் சாமுவேலுக்கு 'மெமோ' வழங்கினார். பள்ளிக்கு புதிய ஆசிரியர் நாளை (இன்று) முதல் நியமிக்கப்பட உள்ளதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.