Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆந்திராவில் இரு கிராமங்களில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு

ஆந்திராவில் இரு கிராமங்களில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு

ஆந்திராவில் இரு கிராமங்களில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு

ஆந்திராவில் இரு கிராமங்களில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு

ADDED : ஆக 16, 2011 04:07 AM


Google News

ஐதராபாத் : ஆந்திராவில் இரு கிராமங்களில், மகாத்மா காந்தி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

ஆந்திரா மெதக் மாவட்டம், ராமாயம்பேட்டையை அடுத்துள்ள ஜான்சிலில்காபூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த, மகாத்மா காந்தி உருவச் சிலையை சமூகவிரோதிகள் சிலர் முழுமையாக உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். கடந்த வெள்ளியன்று இரவு நடந்த இச்சம்பவம் குறித்து, கிராம மக்கள் மறுநாள் போலீசில் புகார் செய்தனர்.

அதேபோல், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆத்ரேயபுரம் அடுத்த அங்கம்பாளையம் கிராமத்தில், பாண்டுரங்க சுவாமி கோவில் எதிரில் நிறுவப்பட்டிருந்த காந்தியின் முழு உருவச்சிலையில் தலை, கைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது. இச்சம்வம் நேற்று முன்தினம் அதிகாலையில், நடந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் கொள்ளை கும்பல், இந்தச் செயலை செய்திருக்கலாம் என, சம்பவ இடங்களில் சிலைகளை பார்வையிட்ட கொத்தபேட்டை எம்.எல்.ஏ., பண்டாரு சத்யநாராயணா தெரிவித்தார். வேறு பல கட்சித் தலைவர்களும் உடைந்த சிலைகளைப் பார்வையிட்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us