/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கிறிஸ்துவ அறக்கட்டளையின் இலவச கண் சிகிச்சை முகாம்கிறிஸ்துவ அறக்கட்டளையின் இலவச கண் சிகிச்சை முகாம்
கிறிஸ்துவ அறக்கட்டளையின் இலவச கண் சிகிச்சை முகாம்
கிறிஸ்துவ அறக்கட்டளையின் இலவச கண் சிகிச்சை முகாம்
கிறிஸ்துவ அறக்கட்டளையின் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : ஆக 15, 2011 02:06 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த காக்காவேரி டாக்டர் டிபேன் நினைவு அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், எஸ்.எஃப்.எஸ்., வளாகத்தில் நடந்தது.
சேலம் மறை மாவட்ட ஆயர் பிலவேந்திரன் தலைமை வகித்தார். டிபேன் நினைவு மருத்துவமனை இயக்குனர் பிரான்சினா வரவேற்றார். சட்டசபை துணை சபாநாயகர் தனபால் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ''மனிதனுக்கு முக்கியமான உடலுறுப்புகளில் கண் இன்றியமையாதது. கண் பார்வையில் பாதிப்பு என்றால், அடுத்தவர்களை நம்பித்தான் வாழ வேண்டும். சமுதாயத்தில் தலைசிறந்த கண்ணொளி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது பாராட்டுக்குரியது. அதன் அடிப்படையில் தான், தமிழக அரசும் நோய் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது,'' என்றார்.முகாமில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். அதில், கண்புரை உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சைக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஆசில் உள்பட பலர் பங்கேற்றனர்.


