ADDED : ஆக 11, 2011 11:53 PM
நாமக்கல்: நாமக்கல், ஆண்டவர் நகரில், மூலிகை மருந்து ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அதன் நிறுவன வளாகத்தில் மரம் நடும் விழா இன்று நடக்கிறது.
மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகிக்கிறார். மாவட்ட வன அலுவலர் ஆஷிஸ்குமார் வஸ்தவா முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்படுகின்றது. மேலும், மூலிகை மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, மரம் நடும் ஆர்வம் உள்ளவர்களுக்கு பலவகை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வேளாண் இணை இயக்குனர், உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன், தோட்டக்கலைத் துணை இயக்குனர் கதிரவன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.