/உள்ளூர் செய்திகள்/தேனி/கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் பாதிப்பு சுகாதாரத்துறை நடவடிக்கை எப்போது...கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் பாதிப்பு சுகாதாரத்துறை நடவடிக்கை எப்போது...
கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் பாதிப்பு சுகாதாரத்துறை நடவடிக்கை எப்போது...
கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் பாதிப்பு சுகாதாரத்துறை நடவடிக்கை எப்போது...
கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் பாதிப்பு சுகாதாரத்துறை நடவடிக்கை எப்போது...
ADDED : ஆக 11, 2011 11:17 PM
ஆண்டிபட்டி : கிராம ஊராட்சிகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை போக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளுக்கு கடந்த ஐந்து மாதங்களாக மானிய நிதிக்குழு மானியம் வழங்கவில்லை. இந்த நிதியில் இருந்து ஊராட்சிக்கு தேவையான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு, மற்றும் துப்புரவு பணியாளர்கள் சம்பளம் இந்த நிதியில் இருந்து வழங்கப்படும். மாநில அரசின் நிதி கிடைக்கப்பெறாததை காரணமாக கூறி பல கிராமங்களில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் கண்டு கொள்ளப்படவில்லை. ஊராட்சியில் குறைந்த சம்பளம் பெறும் துப்புரவு பணியாளருக்கு கடந்த 4 மாதமாக அதுவும் கிடைக்காததால் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. குடிநீர் பிளீச்சிங் செய்யவும், மேல்நிலைத்தொட்டிகள் சுத்தம் செய்யவும் நிதி இல்லாததை காரணம் கூறி ஊராட்சி நிர்வாகத்தினர் ஒதுங்கி கொள்கின்றனர். பல கிராமங்களிலும் சுத்தம் செய்யப்படாத தெருக்கள், சாக்கடைகள், குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி பகுதியின் பல கிராமங்களுக்கும் குன்னூர் ஆற்றில் இருந்து சுத்திகரிக்கப்படாத குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மழைகாலம் துவங்கி விட்டால் மழைநீரும் குப்பைகளுடன் சேர்ந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். சுகாதார சீர்கேடுகளால் தொற்று நோய் பரவும் முன்பு சுகாதாரத்துறையினர் துப்புரவு பணிகளை முடுக்கி விட ஊராட்சி நிர்வாகங்களை வலியுறுத்த வேண்டும்.