/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன் : இந்தியன் பாங்க் அதிகாரி தகவல்விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன் : இந்தியன் பாங்க் அதிகாரி தகவல்
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன் : இந்தியன் பாங்க் அதிகாரி தகவல்
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன் : இந்தியன் பாங்க் அதிகாரி தகவல்
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன் : இந்தியன் பாங்க் அதிகாரி தகவல்
விழுப்புரம் : விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக 7 சதவிகித வட்டியில் ரூபாய் 3 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப் படுவதாக இந்தியன் வங்கி மண்டல பொதுமேலாளர் உலகன் தெரிவித்தார்.
புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மண்டல பொதுமேலாளர் உலகன் கடனுதவி களை வழங்கி பேசியதாவது : விவசாயிகளின் வளர்ச்சிக்கு இந்தியன் வங்கி பல்வேறு வகைகளில் உறுதுணை யாக உள்ளது. விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக 7 சதவிகித வட்டியில் ரூபாய் 3 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. வாடிக்கை யாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்தையே விவசா யிகளுக்கு கடனாக வழங்குகிறோம். கடன் பெறும் விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் உரிய காலத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தினால் தான் டெ பாசிட்தாரர்கள் கேட்கும் போது பணம் திருப்பி தர முடியும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் போது வட்டிச் சுமை குறைந்து, வங்கியில் நல்ல பெயரையும் ஏற்படுத்தும். இந்தியன் வங்கி தொடர்ந்து விவசாயிகளின் நலன் கருதி செயல்படும்.