/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கள்ளநோட்டை கண்டறிவது எப்படி?"டாஸ்மாக்' ஊழியர்களுக்கு டிப்ஸ்'கள்ளநோட்டை கண்டறிவது எப்படி?"டாஸ்மாக்' ஊழியர்களுக்கு டிப்ஸ்'
கள்ளநோட்டை கண்டறிவது எப்படி?"டாஸ்மாக்' ஊழியர்களுக்கு டிப்ஸ்'
கள்ளநோட்டை கண்டறிவது எப்படி?"டாஸ்மாக்' ஊழியர்களுக்கு டிப்ஸ்'
கள்ளநோட்டை கண்டறிவது எப்படி?"டாஸ்மாக்' ஊழியர்களுக்கு டிப்ஸ்'
ADDED : ஆக 11, 2011 11:07 PM
திருப்பூர் : கள்ளநோட்டுகளை கண்டறியும் எளிய வழிமுறை குறித்து, 'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் கேசவன் விளக்கினார்.கள்ளநோட்டுகளை கண்டறிவது குறித்த விழிப்புணர்வு கூட்டம், திருப்பூர் காந்தி நகரில் உள்ள முத்தண்ண செட்டியார் மண்டபத்தில் நேற்று நடந்தது; திருப்பூர் மாவட்ட'டாஸ்மாக்' மேலாளர் செல்வன் அமல்ராஜ் தலைமை வகித்தார்; துணை மேலாளர் வாசுகி முன்னிலை வகித்தார்.
சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் கேசவன் பேசியதாவது: வங்கிகளுக்கு அடுத்தபடியாக, மதுக்கடைகளில் பணப்புழக்கம் அதிகளவில் உள்ளது. கள்ளநோட்டுகளை கண்டறியும் கருவிகள், பல கடைகளில் இருந்தாலும், மின்தடை நேரங்களிலும், வாடிக்கையாளர் கூட்டம் அதிகமான நேரங்களிலும் கள்ளநோட்டுகள் குறித்து, கருவிகளில் கண்டறிய வாய்ப்பு இருப்பதில்லை. கள்ளநோட்டுகளை கண்களால் பார்ப்பதிலும், கை விரல்களால் தடவியும் சில அடையாளங்களை வைத்து, அறிந்துவிட முடியும். குறிப்பாக, ஆறு விஷயங்களை ரூபாய் தாள்களில் கண்காணிக்கும்போது, ஒரிஜினல் நோட்டுக்கும், கள்ளநோட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். ரூபாய் தாள்கள் மடமடப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்; மழையில் நனைந்தாலும், தண்ணீரில் விழுந்தாலும் சாயம் போகாது; நனைந்த நோட்டை வெயிலில் காய வைத்தாலோ, சூடுபடுத்தினாலோ பழைய நிலைக்கு வந்துவிடும். ஆனால், கள்ளநோட்டுகள் விரைவில் சாயம் வெளுத்து, கிழிந்து போகும். ஒரு ரூபாய் தாள் முதல் ஆயிரம் ரூபாய் தாள் வரை, அனைத்து ரூபாய் தாள்களிலும், எண்கள் ஒரே அளவில் சீராக இருக்கும். கள்ளநோட்டுகளில், எண்களின் அளவு குறைந்திருக்கும்.ரூபாய் நோட்டுக்கு நடுவில் வரும் கோட்டில் வித்தியாசம் தெரியும்;'ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா' ஆர்.பி.ஐ., என்ற எழுத்துகள் கள்ளநோட்டில் இருக்காது; ரூபாய் நோட்டில், முகப்பு மற்றும் அடிப்பகுதியில் உள்ள பெயர்கள் எம்ப்ராய்டரி செய்ததுபோல், சற்று உயர்ந்த நிலையில் இருக்கும்; அதை தடவி பார்த்து அறியலாம். கள்ளநோட்டில் அவ்வாறு இருக்காது. ரூபாய் தாளில் உள்ள பச்சை, நீல வண்ணங்கள் சற்று கோணலாக பார்த்தால், நிறங்கள் மாறி தெரியும். கள்ளநோட்டில் அவ்வாறு தெரியாது. நோட்டில் உள்ள காந்தி படமும், வெள்ளை பகுதியில் உள்ள படமும் எதிரெதிரில் சிரித்தபடி தெரியும்; கள்ள நோட்டில் அவ்வாறு தெரியாது. இந்த ஆறு வித்தியாசங்களை வைத்தே, எளிதில் கள்ள நோட்டுகளை அறிந்துவிட முடியும், என்றார். கள்ளநோட்டுகளை கண்டறிவது குறித்து திரையில் படம் காட்டி, விளக்கப்பட்டது. திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 'டாஸ்மாக்' மதுக்கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.