/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ரூ.1.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தஞ்சை டாக்டரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடிரூ.1.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தஞ்சை டாக்டரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி
ரூ.1.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தஞ்சை டாக்டரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி
ரூ.1.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தஞ்சை டாக்டரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி
ரூ.1.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தஞ்சை டாக்டரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி
ADDED : ஆக 11, 2011 10:57 PM
ஊட்டி : ரூ.
1.5 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி, தஞ்சை டாக்டரிடம் 3.5 லட்சம் ரூபாய் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சாவூரை சேர்ந்தவர் முகமது அமீன் சுல்தான். டாக்டரான இவர், சொந்த கிளினிக் கட்டுவதற்காக வங்கிகளில் கடன் பெற விண்ணப்பித்துள்ளார். இதையறிந்த கும்பகோணத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர், தான் பைனான்சியர் என அறிமுகப்படுத்தி கொண்டு,கடன் தருவதாக பல முறை கூறியுள்ளார். கடந்த 9ம் தேதி, பன்னீர் செல்வம் டாக்டர் முகமது அமீனை தொடர்பு கொண்டு, 'ஊட்டியில் பணம் 'ரெடி'யாகி விட்டது. ஊட்டிக்கு வந்தால் பெற்று தருகிறேன்' என, கூறியுள்ளார். பன்னீர் செல்வத்தின் உதவியாளர்கள் என கூறிக்கொண்டு அருண் மற்றும் ராகவன் ஆகியோர் முகமது அமீனுடன் ஊட்டி வந்துள்ளனர். ஊட்டியில் உள்ள ஓட்டலில் ரூம் போட்டு தங்கியுள்ளனர். முகமது அமீனிடம், 3.5 லட்சம் ரூபாயை அருண் மற்றும் ராகவன் பெற்றுக்கொண்டனர். அப்போது ஒரு பெரிய பையை காட்டி, 'இதில் 80 லட்சம் ரூபாய் உள்ளது; மீதமுள்ள 75 லட்சம் ரூபாயை, ஆடிட்டரிடம் சென்று ஆவணங்கள் தயார் செய்து கொடுக்கிறோம்' எனக்கூறி, பையை திறந்து காட்டியுள்ளனர். அதில் 1000 ரூபாய் கட்டுகள் இருந்துள்ளன. நேற்று முன்தினம் மாலை டாக்டரை அழைத்து ஊட்டி ஐ.ஓ.பி., வங்கிக்கு காரில் வந்துள்ளனர். வங்கியின் வெளியே காரை நிறுத்தி விட்டு அருண் மற்றும் ராகவன், ஆடிட்டரை அழைத்து வருவதாக கூறி சென்று விட்டனர். வெகுநேரமாகியும் இருவரும் திரும்ப வராததால், டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த பணப்பையை பார்த்த போது பேப்பர் கட்டுகளில் மேல் புறத்தில் மட்டும் ஆயிரம் ரூபாய் தாள் வைத்திருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த டாக்டர், தாம் ஏமாற்றப்பட்டோம் என தெரிந்து, ஊட்டி பி1 காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அருண், ராகவன் மற்றும் பன்னீர் செல்வத்தை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.