/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பெல்லாரிக்கு விலை இல்லைகண்ணீர் சிந்தும் விவசாயிகள்பெல்லாரிக்கு விலை இல்லைகண்ணீர் சிந்தும் விவசாயிகள்
பெல்லாரிக்கு விலை இல்லைகண்ணீர் சிந்தும் விவசாயிகள்
பெல்லாரிக்கு விலை இல்லைகண்ணீர் சிந்தும் விவசாயிகள்
பெல்லாரிக்கு விலை இல்லைகண்ணீர் சிந்தும் விவசாயிகள்
UPDATED : ஆக 11, 2011 05:32 AM
ADDED : ஆக 11, 2011 05:22 AM
பல்லடம்:பெல்லாரிக்கு கட்டுபடியான கொள்முதல் விலை கிடைக்காததால், பல்லடம்
பகுதி விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.பல்லடம் பகுதியில் ஜல்லிப்பட்டி,
வாவிபாளையம், குள்ளம்பாளையம், கழுவேறிபாளையம், செஞ்சேரிப்புத்தூர்,
வதம்பச்சேரி, தாளக்கரை, குண்டடம் உட்பட பல இடங்களில் 4,000 ஏக்கர்
பரப்பளவில் பெல்லாரி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து
வருகிறது. ஒரு கிலோ தரமான பெல்லாரி ரூ.11க்கும், சற்று தரம் குறைந்தது
ரூ.எட்டுக்கும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல்
செய்கின்றனர்.தற்போதுள்ள விலை கட்டுபடியாகாததால், பல்லடம் பகுதியில்
பெல்லாரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள்
கண்ணீர் சிந்துகின்றனர். குறைந்த பட்சம் கிலோவுக்கு 15 ரூபாய் கிடைக்க
வேண்டும். அவ்வாறு கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து பெல்லாரி சாகுபடி செய்ய
முடியும். இல்லையெனில், மீண்டும் பெல்லாரி சாகுபடி செய்ய மனம் வராது என
விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
ஜல்லிப்பட்டி விவசாயி பாலு,
செஞ்சேரிப்புத்தூர் விவசாயி காளியப்பன் ஆகியோர் கூறியதாவது:பெல்லாரி 150
நாளில் அறுவடைக்கு வரும். ஒரு ஏக்கர் சாகுபடி செய்து மருந்து, உரச்செலவு
மற்றும் அறுவடை வரை ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 10 முதல் 12
டன் வரை மகசூல் கிடைக்கும். இதுவும் போதிய அளவு தண்ணீர் வசதி இருந்தால்
மட்டுமே. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், எட்டு டன் மட்டுமே பெல்லாரி
கிடைக்கும்.தற்போதுள்ள கொள்முதல் விலை கட்டுபடியாகாது. 150 நாட்கள்
பாடுபட்டு, ரூ.50 ஆயிரம் மட்டுமே லாபம் கிட்டும். குறைந்தபட்சம் ரூ.15
கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து பெல்லாரி சாகுபடி செய்ய
முடியும். இல்லையெனில், பெல்லாரி விவசாயத்துக்கு முழுக்கு போட வேண்டிய
சூழ்நிலை ஏற்படும், என்றனர்.