Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு புதுச்சேரியில் இன்று துவக்கம்

அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு புதுச்சேரியில் இன்று துவக்கம்

அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு புதுச்சேரியில் இன்று துவக்கம்

அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு புதுச்சேரியில் இன்று துவக்கம்

ADDED : ஆக 11, 2011 04:17 AM


Google News
புதுச்சேரி:புதுச்சேரியில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு அமைப்பு செயலாளர் டாக்டர் உத்திராபதி, பொருளாளர் டாக்டர் சதீஷ் நல்லாம் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க தமிழகம் மற்றும் புதுச்சேரி கிளை சார்பில், மாநில அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டுக்கு-'பான்சிகான்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று(11ம் தேதி) துவங்கி 14ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து டாக்டர்கள், முதுநிலை மாணவர்கள் 500 பேர் பங்கேற்கின்றனர். மாநாட்டின் முதல் நாளன்று, அரசு பொது மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. பின், 14ம் தேதி வரை சன்வே ஓட்டலில் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி, மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

வரும் 13ம் தேதி, மாநாட்டை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார். அறுவை சிகிச்சைகளில் வந்துள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள், நவீன சிகிச்சை முறைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us