Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கடன் பெற்று செலுத்தாத மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது வழக்கு

கடன் பெற்று செலுத்தாத மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது வழக்கு

கடன் பெற்று செலுத்தாத மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது வழக்கு

கடன் பெற்று செலுத்தாத மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது வழக்கு

ADDED : ஆக 09, 2011 01:39 AM


Google News
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாரம் தோகூர் பஞ்சாயத்தில் செயல்பட்டு வந்த 11 மகளிர் குழுக்களுக்கள் சார்பில் வி.எஸ்.பி.கே., என்ற பெயரில் செங்கல் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது. இக்குழுவினர் பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் செங்கல் கால்வாய் தொழில் செய்திட ஏதுவாக, தொழில் கடன் ஒரு குழுவுக்காக மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 100 ரூபாய் வீதம், 11 குழுக்களுக்கு ரூபாய் 33 லட்சத்து 23 ஆயிரத்து 100 தஞ்சாவூர், பாரத ஸ்டேட் வங்கி மூலம் 2005 ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி அன்று கடன் பெற்று தொழில் நடத்தி வந்தனர்.

இக்குழுக்கள் வங்கியில் இருந்து பெறப்பட்ட கடனை சரி வர செலுத்தாமலும், வரவு செலவு கணக்குகளை சரியாக பராமரிக்காமலும், செங்கல் கால்வாய் தொழில் தற்போது செயல்பாடுன்றி உள்ளது. இது ஆய்வில் தெரிய வந்தது.

இக்குழுக்களை விசாரணை செய்த வகையிலும், குழுக்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும், செங்கல் கால்வாய் கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்தியதில் 11 சுய உதவிக்குழுக்களில் மூன்று மகளிர் உதவிக்குழுக்கள், அதாவது தோகூர் அன்பு மகளிர் உதவிக்குழு பொறுப்பாளர் சகாயசெல்வி, பாலை மகளிர் உதவி குழு பொறுப்பாளர் தாமரைசெல்வி, முல்லை மகளிர் உதவிக்குழு பொறுப்பாளர் கனகா ஆகியோர்களிடம் 21 லட்சத்து ஒன்பது ஆயிரத்து 576 ரூபாய் கையிருப்பு உள்ளதாக தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.மூன்று பொறுப்பாளர்களால் முறைகேடாக தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளதால் இந்த மூன்று பொறுப்பாளர்கள் மீது களவாடப்பட்ட தொகை 21 லட்சத்து ஒன்பது ஆயிரத்து 576 ரூபாயை முழு பொறுப்பாக்கி, தஞ்சை மாவட்ட க்ரைம் போலீஸில், கடந்த மூன்றாம் தேதி பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us