ADDED : ஆக 09, 2011 01:10 AM
தேவகோட்டை : தேவகோட்டை பிராமணர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது.
பாலசுப்பிரமணியன், ஆடிட்டர் துரைராமசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் நாராயணன், தலைமையாசிரியர் சீனிவாசன்,பொருளாளர் கணேசன் பங்கேற்றனர். கூட்டத்தில் பிராமணர் சமூகத்திற்கு மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு,தேவகோட்டையிலிருந்து காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு ஏற்கனவே இருந்த பஸ் வசதியை மீண்டும் இயக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.


