இந்தியா ஆற்றில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி?
இந்தியா ஆற்றில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி?
இந்தியா ஆற்றில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி?
ADDED : ஆக 09, 2011 12:45 AM
அவுரங்காபாத் : பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 12 பேரைக் காணவில்லை.
அவுரங்காபாத் மாவட்டம், சன்ஹாத் கிராமத்தில் புன்பன் ஆற்றில் நேற்று, படகு ஒன்றில் 25 பேர் பயணித்துள்ளனர். பாரம் தாங்காமல், நடு ஆற்றில் படகு கவிழ்ந்தது. இதில் 13 பேர், நீச்சல் தெரிந்ததால் நீந்தி, கரை சேர்ந்து விட்டனர். ஆனால், ஆற்றில் மூழ்கிய 12 பேர் கதி என்னவானது என்பது தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணியில், மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


