Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மனைவியை கொன்றவருக்கு ஆயுள்

மனைவியை கொன்றவருக்கு ஆயுள்

மனைவியை கொன்றவருக்கு ஆயுள்

மனைவியை கொன்றவருக்கு ஆயுள்

ADDED : ஆக 09, 2011 12:19 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி, தருவைக்குளம் அடுத்த சக்கம்மாள்புரம் விவசாயி வன்னியராஜா,30.

இவர், மனைவி ஆதி அனந்தம்மாள்,28, நடத்தையில் சந்தேகப்பட்டார். இதனால், இருவரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக, 2008 ஜூலை 30ல், வீட்டில் வைத்து வன்னியராஜா, ஆதி அனந்தம்மாளை, சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர், இறந்து போனார். கொலையை மறைக்க, ஆதி அனந்தம்மாள் உடலுக்கு, வன்னியராஜா தீ வைத்தார். அது சரியாக எரியாததால், உடலை குழிதோண்டி புதைத்து விட்டார். பின்னர், அவரை தருவைக்குளம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பிரபுதாஸ், வன்னியராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், 1,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us